Description
வரலாற்றில் நடக்கும் வினோதமான சம்பவங்களுக்கு ஈடு இணையாக இன்னொன்றைச் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட வரலாற்று நிகழ்வுகளைச் சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறார் நியாண்டர் செல்வன்.
• மிஸ் இந்தியா கேள்விப்பட்டிருப்பீர்கள். பாலியல் தொழிலாளியாக மாறிய ஒரு மிஸ் இந்தியா பற்றித் தெரியுமா?
• இஸ்ரேல் கேள்விப்பட்டிருப்பீர்கள். இஸ்ரேலின் பரப்பளவிற்குச் சமமான பரப்பளவு கொண்ட மாட்டுப் பண்ணை எங்கு உள்ளது என்று தெரியுமா?
• ஹிலரி க்ளிண்டனின் தேர்தல் தோல்வி பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தத் தோல்விக்குப் பின்னுள்ள ஹ்யூமா எனும் பெண்ணைத் தெரியுமா?
• விவியன் ரிச்சர்ட்ஸ் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அவருக்கும் நீனா குப்தாவுக்கும் பிறந்த மசாபா குப்தாவைத் தெரியுமா?
• நோபல் விருது கேள்விப்பட்டிருப்பீர்கள். நோபல் வியாதி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
வரலாறு, புவியியல், சினிமா, அரசியல், விளையாட்டு எனப் பல வரலாற்றுத் தளங்களில் நிகழ்ந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளைப் படம்பிடிக்கிறது இந்தப் புத்தகம்.
பேலியோ டயட்’, ‘ஆல்ஃபா அம்மா ஒமேகா அப்பா’ போன்ற மிகப் பிரபலமான புத்தகத்தின் ஆசிரியரிடமிருந்து மற்றுமொரு சுவையான நூல்.