Description
மாதவியின் நாட்டியத்தைக் காண கோவலன் சென்றிருந்தான் அவளது அழகில் மயங்கினான். மாதவியுடன் குடும்பம் நடத்தினான். மாதவிக்கும் கோவலனுக்கும் பிறந்த மகள்தான் மணிமேகலை. மதுரையில் கோவலன் கள்வன் என்று குற்றம் சுமத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டான். கண்ணகியும் மதுரையை எரித்தபின் மாண்டாள். இவற்றை எல்லாம் அறிந்த மாதவி நாட்டியம் ஆடுவதை விட்டாள். புத்த மதத்தில் சேர்ந்து துறவியானாள். மணிமேகலையையும் புத்த மதத்தில் சேர்த்தாள் மாதவி.