Description
விருந்தோம்பிப் பழக்கப்பட்ட சிவகாமி அம்மையார், “மகனே! நீ முதலமைச்சரான பிறகு என்னைப் பார்க்க பலர் வருகின்றனர். வீடு தேடி வருபவர்களுக்குச் சோடா, கலர் தருவதால் செலவு கூடுகிறது. இனிமேல் மாதம் 120 ரூபாய்க்குப் பதில் 150 ரூபாய் அனுப்பினால் நல்லது” என்று காமராசருக்கு கடிதத்தில் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.
அதற்குக் காமராசர் எழுதிய பதில் கடிதம் இதோ:
“அம்மா! வீடு தேடி வருபவர்களுக்கு நீ சிரமப்பட்டுச் செலவழிக்க வேண்டியதில்லை. சோடா, கலர் தருவதை நிறுத்து. 120 ரூபாயிலேயே குடும்பத்தைச் சிக்கனமாக நடத்து” என்று எழுதியிருந்தார்.