Description
இலக்கியம் உருவாக்குவது ஒற்றைப்படையான ஒரு வரலாற்றுச் சித்திரம் அல்ல. அதை விவாதச் சித்திரம் என்று சொல்லலாம். ஜோ டி குருஸ் எழுதுவதும் குறும்பனை பெர்லின் எழுதுவதும் கிறிஸ்டோபர் ஆன்றணி எழுதுவதும் ஒன்றுடன் ஒன்று முரண்படும் வரலாறுகள். ஒன்றோடொன்று பின்னி நிரப்பும் வரலாறுகளும்கூட.
அவ்வாறு உருவாகும் ஒட்டுமொத்த வரலாறே மீனவர் வாழ்க்கையாக இருக்கும். அதுவே தமிழ் இலக்கியத்தின் ஒரு முக்கியமான ஊடுசரடாக ஆகும். அதுவே தமிழ் வரலாற்றை நிரப்பும்.
கிறிஸ்டோபர் எழுதிய துறைவன் அத்தகைய வலுவான ஒரு படைப்பு. இதுவரை வந்த கடலோர நாவல்களில் ஐயத்திற்கிடமின்றி ஆழிசூழ் உலகுதான் சிறந்தது. துறைமுகம் ஒரு பெரும்படைப்பே. அவ்விரு ஆக்கங்களுக்கு அனைத்துவகையிலும் நிகராக நிற்கும் படைப்பு இது.
-எழுத்தாளர் ஜெயமோகன்