Description
சனாதனம் என்பது ஒரு மெய்யியல் கோட்பாடு அல்ல. மாறாக ஒரு ஆஸ்திக இந்துவின் வாழ்க்கை எப்படி வாழப்பட வேண்டும் என்பதற்கான விதிமுறைகள் என்றும், இவ்விதிமுறைகள் பழமையான நூல்களில் எவ்வாறு விளக்கப்பட்டுள்ளன என்பதையும் தொகுத்துள்ளார் ஆசிரியர். சனாதன நெறி என்பது ஒற்றை நூலில் பகவத் கீதை போல எழுதப்பட்டதல்ல என்ற புரிதலை உருவாக்கும் இவர், அதன் அடிப்படை நோக்கம் வர்ணாஸ்ரம தர்மத்தை வலியுறுத்துவதே என்பதை பட்டவர்த்தனமாக்குகின்றார். இன்றளவில் சாதியத் தாக்குதல்களுக்கு முக்கிய விதையிட்டது ஆதி மூலமாகிய சனாதனம்தான் என்பதை ஆதாரப்பூர்வமாக செ.தினகர ஞானகுருசாமி நிலைநாட்ட எடுத்துள்ள இம்முயற்சி பெரும்பாலும் வெற்றி அடைந்ததாகக் கருதுகின்றேன்.
* பேரா.இரா.முரளி