Description
1938ஆம் ஆண்டுகள் வரை பாலஸ்தீனத்தின் பிரச்சினைகளை ஆய்வு செய்து கொடுத்துள்ளார். பாலஸ்தீன நிலப்பகுதி எப்படி இருந்தது? யார் யார் ஆதிக்கம் செய்து பேரழிவை ஏற்படுத்தினார்கள் என்பதில் ஆரம்பித்து லண்டனில் நடைபெற்ற சமரச மாநாடுகள் வரை இந்த நூலில் கொண்டுவந்திருக்கிறார்.உள்ளங்கைக்குள் ஒட்டுமொத்த உலகம் மட்டுமல்ல… பிரபஞ்சத்தை அடக்கிவிடக்கூடிய தகவல் தொழில்நுட்பப் புரட்சி உச்சத்தில் இருக்கும் காலம் இது. ஆனால், மிக மிகக் குறைவான தகவல்களை மட்டுமே பெற வாய்ப்புள்ள காலகட்டத்தில் அறிஞர் வெ.சாமிநாத சர்மா, பாலஸ்தீனப் பிரச்சனையை அதன் வரலாறு, பண்பாடு, அரசியல், பொருளாதார வளம், ஏகாதிபத்திய தலையீடு என்ற அம்சங்களுடன் வர்க்கரீதியான பார்வைகளையும் உள்ளடக்கி ‘பாலஸ்தீனம்’ என்ற நூலை எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.