Description
திருச்சி கோவில்களின் சிறப்பையும், வரலாற்றையும் கூறும் நூல்.
சிற்பக் கலைகள், திருமுறைகள், சிவாலய வழிபாட்டு முறைகள், செய்யத்தகாத குற்றங்கள், சிவ வடிவங்கள் விளக்கப்பட்டுள்ளன. மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், தாயுமானவர் கோவில் பற்றிய தகவல்கள் உள்ளன.
நெடுங்களநாதர், ஒப்பிலா நாயகி கோவிலின் சிறப்பு உள்ளது. உறையூர், காசிவிஸ்வநாதர் – விசாலாட்சி கோவிலும், கிருஷ்ணன் கோவிலும் மன்னர் சரபோஜி கட்டியதை விவரிக்கிறது. அருமையான தகவல் தரும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்