கலைஞர் கட்டிய தமிழ்நாடு


Author: எஸ்.கே.பி. கருணா

Pages: 190

Year: 2024

Price:
Sale priceRs. 500.00

Description

கலைஞர் குறித்து எழுதப்பட்ட பல நூறு புத்தகங்களில் இருந்து, இந்தப் புத்தகம் எப்படி வேறுபடுகிறது? முழுக்க முழுக்க தரவுகளாலும், ஆய்வறிக்கை முடிவுகளாலும் இயக்கப்பட்ட கட்டுரைகளைக் கொண்டது இந்தப் புத்தகம். இந்தப் புத்தகத்தை எழுதும் பயணத்தில் நான் பெற்றது என்ன? நான் எதை அடைந்தேன்? ஒரு மாபெரும் கனவின் விளைவை, சுருக்கமான பதிலாகத் தருவது கடினம். பல இடங்களில் கண்கள் கலங்கினேன். பெருமிதமாக உணர்ந்தேன். மூன்றாவது தலைமுறையாகக் கழகத்தோடு இணைந்திருப்பதற்காகக் கர்வமும் கூடக் கொண்டேன். இதையெல்லாம் தாண்டியும் ஒன்றை நான் கண்டறிந்தேன். நான் எதை அறிந்தேனோ, உணர்ந்தேனோ அதையே இந்தப் புத்தகத்தின் தலைப்பாக வைத்திருக்கிறேன். 'இந்த நூலைத் தொடுபவர் என்னைத் தொடுபவர் ஆகிறார்' என்றார் ஓர் எழுத்தாளர். நான் இப்படிச் சொல்கிறேன், 'எனது இந்த நூலைத் தொடுகிறவர். கலைஞரைத் தொட்டவர் ஆகிறார்'.

எஸ்.கே.பி. கருணா

You may also like

Recently viewed