Description
யதிராஜ ஜீவா கவிதைகள் அதிர்ந்து பேசாதவை. சாந்தமாக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்பவை. இடர்களை வெகு நிதானத்தோடு எதிர்கொண்டு இயல்பாக்கும்
வாழ்வியலின் தன்மை கொண்டவை. யதிராஜ ஜீவாவிற்கு காட்சிப்படுத்துதல் வெகு நேர்த்தியாக கைகூடி இருக்கிறது. ஒன்று, மற்றொன்று, பிறிதொன்றென
இவரின் அடுக்குகள் வசீகரிக்கும் தன்மையோடு இருக்கின்றன. அட இது நல்லாயிருக்கே என அடிக்கடி சொல்லிக் கொள்ளவும், கள்ளுண்ட போதையில் களித்திருக்கவும்,
இழந்த அல்லது மறந்த நிறைய சொற்களைக் கண்டு பயணப்பட்ட அனுபவங்களையும் அடையச் செய்கிறது இத்தொகுப்பு.
- கவிஞர் ந. பெரியசாமி