Description
மனம் திறந்து சொல்கிறேன் என்கிற தொடரை பற்றி வாசர்கள் அனைவருக்கும் தெரியும். அத் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது எனக்கு வருத்தமளித்தது. இதனை பற்றி குமுதம் நிறுவன ஆசிரியர் திரு.எஸ்.ஏ.பி யிடம் நான் பேசியபோது. அவர் ரஜத், இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை நீங்கள் சாதனைதான் செய்திருக்கிறீர்கள். இந்த தொடர் இன்னும் பல ஆண்டுகள் அனைவராலும் பேசப்படும் என்றார். திரு. எஸ். ஏ. பி சொன்னது போல பல வருடங்கள் கழித்து குமுதம் இதழில் மனம் திறந்து சொல்கிறேன் கட்டுரை முழுமையாக மீண்டும் பிரசுரிக்கப்பட்டது.