Description
அவளுக்குள்ள தூரம் வாழ்விலும் வாழ்வாதாரத்திலும் வருமானத்திலும் நிகழ்ந்த வீழ்ச்சிகளை, மேலெழுந்த தருணங்களை, காதல் ஊஞ்சலாடிய வசந்தங்களின் வாஞ்சையை, ஆதரவு அளித்த, அரவணைத்த மனிதங்களை உயிரோட்டமாகப் பேசுகிறது இந்நூல்.உயிரும் உணர்வும் இரத்தமும் சதையுமாகப் பேசுகிறது இந்நூல். அதே சமயம் இந்த கேடுகெட்ட சமூகம் என்னதான் வஞ்சித்தாலும் வசைபாடினாலும் புறந்தள்ளினாலும் இந்தப் பூவுலகில் நானும் வாழவேண்டும் என்ற அவளுடைய துடிப்பும் துள்ளலும் துணிவும் ஒவ்வொரு பத்தியிலும் ஊடாடிக்கிடக்கிறது.