Description
பாலஸ்தீனம்: நம்மால் என்ன செய்ய முடியும்? இந்த புத்தகம் இஸ்ரேலும் பாலஸ்தீனமும் உரிமை கோரும் அந்த நிலம் யாருடையது? இது இரண்டு மதங்களுக்கிடையிலானப் போரா? ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கமா? இஸ்ரேலியர்கள் பாதுகாப்பில்லாமல் வாழ்கிறார்களா?
“பாதுகாப்பைத் தக்கவைக்க” என்று சொல்லிக் கொண்டு இஸ்ரேல் தொடுக்கும் போர் சரிதானா? அந்த நிலப்பரப்பில் அமைதி நிலவாமல் இருப்பதற்கு யார் காரணம்? இந்த ஒட்டுமொத்தப் பிரச்சனைக்குமான தீர்வுதான் என்ன? பல கேள்விகள் நம் முன்னே இருக்கின்றன. வரலாற்று நிகழ்வுகளையும் உண்மையான ஆதாரங்களையும் எடுத்துவைத்துக் கொண்டு விடையினைத் தேட முடிவு செய்வோம். வாருங்கள்…!