நானிலம் தேடி


Author: இராஜேஷ் லிங்கதுரை

Pages: 286

Year: 2024

Price:
Sale priceRs. 300.00

Description

கண்ணகி சாபம் விட்டதால் மதுரை எரிந்தது. அறம்தவறிவிட்டோமென்று உணர்ந்த மறுநொடி உயிரை விட்டார் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். அவர் மனைவி கோப்பெருந்தேவியும் அவருடனே இறந்து போனார். அப்போது கொற்கையில் ஆட்சி செய்தவர் வெற்றிவேல் செழியன். கண்ணகியின் சாபத்தைப்போக்க வெற்றிவேல் செழியன் என்ன செய்தார் என்பதை அடித்தளமாக வைத்து எழுத்துப்பட்ட சமகால கதைதான் இந்தப் புதினம். புதினம் என்ற வரையறையை மீறாமல், ஒரு திரைப்படம் பார்ப்பது போன்ற விறுவிறுப்பை எழுத்தில் கொண்டுவர வேண்டுமென்ற நோக்கில் எழுதப்பட்ட புத்தகம். இந்த புதினத்தின் நிறைகுறைகளைத் தாண்டி. இன்றைய தலைமுறையினருக்கு சிலப்பதிகாரம் போன்ற தமிழ் காப்பியங்கள் மீது ஆர்வத்தைத் தூண்ட வேண்டுமென்பது இந்தப் புதினத்தின் முக்கிய நோக்கம். யார் இந்த கண்ணகி? என்று இன்றைய தலைமுறையினரை இணையத்தில் தேட வைத்தால் அதுவே இந்த நூலின் வெற்றி. இந்நூலாசிரியர், சரித்திர காலப் பின்னணியையும் சமகால நடப்புச் சூழலையும் பிணைத்து ஒரு கதையை உருவாக்கித் தந்துள்ளார் என்பது மட்டுமல்ல, ஆங்காங்கே, நகைச்சுவை உணர்வை அள்ளித் தெளித்து, நம்மை துள்ளல் உற்சாகத்தோடும். சில அறிய வேண்டியவைகளையும் கூறி தொடர்ந்து படித்து விட வேண்டும் எனும் ஆர்வத்துடிப்புக் குறைந்து விடாமலும் பார்த்துக் கொள்கிறார். வேலு சுபராசர்

You may also like

Recently viewed