Description
நாமெல்லாம் ஒரு குடத்துத் தண்ணீரை வைத்து இரண்டு நாட்கள் வாழ்ந்து விடலாம், பயிர்களுக்குக்கெல்லாம் அப்படியா, எவ்வளவு தண்ணீர் வேண்டும். ஆடு, மாடுகளின் நிலைமையும் அதே தான் பூதம், பிசாசு என மூடநம்பிக்கைகளைக் கிளப்பி ஏமாற்றுவதையும் (கிணற்று பூதம்) Kinatru Bootham , கறுப்பு நிறத்துக்கெதிராக அவமதிப்புகளை முன்னிறுத்துவதையும் (கருப்பி என்னும் எருமை) உமையவனின் கதைகள் கண்டிக்கின்றன. வரவேற்போம். கைகோர்த்து நடக்கும்போதே, கருத்து வேறுபாடுகள் முளைக்கின்றன. ஒற்றுமை பிரச்சினைக்குள்ளாகிறது. நட்பு உடைந்துபோகுமோ என்ற கவலை வருகிறது. உடையாது என்று உறுதி அளிக்கின்றன உமையவன் கதைகள்.