அருகர்களின் பாதை


Author: ஜெயமோகன்

Pages: 336

Year: 2024

Price:
Sale priceRs. 400.00

Description

ஒருவர் ஒருநாளில் நடந்து செல்லும் தொலைவுக்கு ஒன்று என அறநிலைகளை சமணர்கள் இந்தியாவில் அமைத்தார்கள் என்பது வரலாறு. உண்மையில் அவை இருந்தனவா, இன்று எப்படி உள்ளன என அறியும் பொருட்டு ஜெயமோகன் அவர் நண்பர்கள் ஆறு பேருடன் ஒரு காரில் ஒரு மாத காலம் பயணம் செய்தார். ஈரோடு முதல் ராஜஸ்தானின் லொதுர்வா வரை ஆறு மாநிலங்கள் வழியாக. இந்தியாவின் மறக்கப்பட்ட சமணத்தலங்களை தேடித் தேடிச் சென்று பார்த்தார். அந்த அறநிலைகளின் சங்கிலி இன்றும் அப்படியே இருப்பதைக் கண்டறிந்தார். அனேகமாக அத்தனை இடங்களிலும் அவர்கள் சமண அறநிலைகளில் உணவும் உறைவிடமும் பெற்றனர். மிக மிகக் குறைவான செலவில் அப்பயணத்தை நிறைவு செய்தனர். அப்பயணத்தில் ஜெயமோகன் தினமும் பயணக் குறிப்புகளை தன் இணையதளத்தில் எழுதினார். பல்லாயிரம் வாசகர்களால் அவை வாசிக்கப்பட்டன. இந்நூல் அக்குறிப்புகளின் தொகுப்பு.

You may also like

Recently viewed