Description
கத்தோலிக்கத் திருஅவையால் மறக்கப்பட்ட திரிங்காலின் வரலாற்றை ஆவணக் காப்பகங்களில் கிடைத்த தரவுகளைக் கொண்டு நெய்யப்பட்டுள்ள புனைவுகளற்ற பெருங்கதை இது. உடல் தளர்ந்த காலத்தில் தான் மிகவும் நேசித்த வ.புதுப்பட்டி மண்ணில் தனது உடலைப் புதைக்க தானே குழிவெட்டிக் கொண்ட திரிங்காலின் தன்னலமற்ற உயிரோட்டமுள்ள வரலாறு மீண்டும் இந்த நெடுங்கதை மூலம் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.
- மேதகு முனைவர் அந்தோனி பாப்புசாமி பேராயர்,
மதுரை உயர் மறைமாவட்டம், தலைவர்.