Description
சங்க இலக்கியக் கவிதைகளின் நயங்களையும், பொருளையும் இனிய, எளிய நடையில் தொடர்ந்து முகநூலில் எழுதி வந்தவர் சு.பொ.அகத்தியலிங்கம். இன்றைய புதிய தலைமுறை இளம் வாசகர்கள் படித்துச் சுவைக்க ஏற்ற 25 குறுங்கட்டுரைகளைத் தொகுத்து இந்நூலில் தந்திருக்கிறார். வயிறாரத் தாய் முலை உண்ணாத குழந்தையாய்த் தமிழ்ச் சமூகம் வாடிப் போய் விடக்கூடாது என்பதே இவரின் நோக்கம்.