Description
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஆளுமையை, அரசியலை முழுமையாக முன்வைக்கும் நுால். பிறப்பு முதல் இறப்பு வரையில் முக்கிய செயல்பாடுகளை விவரித்து அறிந்துகொள்ள உதவுகிறது.
வாழ்க்கை குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் சாரத்தை தந்திருப்பது, அவரது ஆளுமையை வெளிப்படுத்திக் காட்டுவதாக இருக்கிறது. காமராஜரின் அரசியல் வாழ்வில் தேவரின் பங்கு, தேவருக்கும், நடிகர் சிவாஜிக்கும் நடந்த சந்திப்பு, மக்கள் பணியில் தேவரின் பங்கு போன்றவை சொல்லப்பட்டிருக்கிறது. குற்றப் பரம்பரைச் சட்டத்துக்கு எதிராக நடத்திய போராட்ட விபரம் குறித்த தெளிவான ஆவணமாகவும் உள்ளது.
தேவருக்கு சொந்தமான கிராமங்கள், குரு பூஜை விபரம் தெளிவாக தரப்பட்டுள்ள நுால்.
– ஊஞ்சல் பிரபு