திரைக்கதைகள் நுால் வரிசை – 5


Author: சுப்ரபாரதி மணியன்

Pages: 265

Year: 0

Price:
Sale priceRs. 250.00

Description

நெஞ்சை அள்ளும் திரைக்கதைகளின் தொகுப்பு நுால். திரைப்படமாக எடுத்தால் சிறப்பாக ஓடும். அத்தனை கதைகளும், எதார்த்த நடையில், உள்ளம் கொள்ளை கொள்வதாக உள்ளன. கதை மாந்தர் பேச்சும் வெகு இயல்பாக உள்ளது. தேயிலை தோட்ட ஊழியர்கள், புது மேனேஜர் வருகையைப் பற்றி பேசிக் கொள்வது, உள்ள உணர்வை பிரதிபலிப்பதாக உள்ளது. வெற்றி பெற்ற நண்பன், பணத்தை தான் வைத்துக் கொள்ளாமல், மறைந்த உயிர் நண்பனின் நினைவாக இளைஞர் மன்றத்திற்கு வழங்குவது நட்பின் உயர்வை காட்டுகிறது. காசு மட்டும் இல்லையென்றால், மனிதன் வாழ்வது வீண் என்பதை சொல்வது உண்மை. நம்மை விரும்புகிறவரை கட்டினால் தான் சந்தோஷமாக இருப்போம் என்ற முத்தான கருத்து முன் வைக்கப்பட்டுள்ள நுால். – டாக்டர் கார்முகிலோன்

You may also like

Recently viewed