Description
தன் செயல்களால் தானே இன்பம் அடைகிறவன் மனிதன்;
தன் செயல்களால் தானும் இன்பம் பெற்று, தன்னைச் சார்ந்திருப்பவர்களையும் இன்பம் அடையச் செய்பவன் தேவன்;
தன் செயலால் பிறருக்குத் துன்பத்தைத் தந்து, அதைக் கண்டு இன்பமடைகிறவனே அசுரன். இந்த மூன்று பிரிவினருக்கும் மேலாக இருப்பவன் இறைவன்.
அசுரனின் அச்சுறுத்தல்கள் மற்றும் தீய செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு மேலான இறைவனை வேண்டி வழிபடும் போது, அவர்களின் வேண்டுதலை ஏற்கும் இறைவன், புதிய தோற்றம் எடுத்து, அசுரர்களை அழித்துத் தன்னை வேண்டியவர்களைக் காப்பாற்றுவதுடன் அவர்களின் நல்வாழ்வுக்கும் வழிகாட்டுகிறார்