சாட்ஜிபிடி சரிதம்


Author: சைபர் சிம்மன்

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 350.00

Description

சாட்ஜிபிடி எனும் ஏஐ திறன் கொண்ட பேசும் மென்பொருள் உருவான விதத்தையும், அதன் வரலாற்று பின்னணியையும் விவரிக்கும் நூல் இது. உலகையே தலைகீழாக மாற்றிவிடும் என சாட்ஜிபிடி அறிமுகம் உண்டாக்கிய பரபரப்புக்கு மத்தியில், இந்த சாட்பாட் செயல்படும் விதத்தையும், முக்கியமாக அதன் வரம்புகளையும் இதில் உள்ள கட்டுரைகள் உணர்த்துகின்றன. அதோடு, சாட்ஜிபிடியை மையமாக கொண்டு பொதுவாக ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பிரச்சனைகளையும் பல்வேறு கோணங்களில் படம் பிடித்துக்காட்டுகிறது. ஏஐ விவாதத்தில் அதன் அடிப்படை அம்சங்கள் தொடர்பான புரிதல் அவசியம் எனும் வகையில், ஏஐ நுட்பங்களை விளக்க முற்பட்டுள்ளதோடு, ஆக்கத்திறன் ஏஐ சார்ந்த சிக்கல்களையும், கேள்விகளையும் அலசுகிறது. செயற்கை தரவுகள், பொய் ஆக்கங்கள் உள்ளிட்ட நவீன பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டுகிறது. ஏஐ பரப்பில் இந்த நூல் தொட்டுக்காட்டும் புள்ளிகள் அநேகம். இந்து தமிழ் திசையின் காமதேனு டிஜிட்டல் பதிப்பில் வெளியான கட்டுரைகளின் நூல் வடிவம்.

You may also like

Recently viewed