Description
அவரவர் உலகம்தான் என்றாலும் அன்புச் சக்கரத்தில் ஒவ்வொரு நாளும் சுழன்றாலும், எங்காவது யாராவது ஒருவர் கவிதை எழுதிக்கொண்டே இருக்கிறார். வகுப்பறைக்குள்ளே. கரும்பலகையில் சொற்களை விதைக்கிற ஆசிரியராக இருந்தபடியே கரிசல்காட்டு முத்துலாபுரம் சேவு ருசி போல் தன்னுடைய பால்யம் என்றொரு பருவத்தை நினைவுகளை மகேந்திர பாபு அசை போடுகிறார் இந்தத் தொகுப்பில்.
இன்றைய நாளுக்காக, இந்தத் தொகுப்புக்காக ஒதுக்கப்பட்ட. ஆனால் எழுதப்படாத, சில கவிதைகள் உங்களிடம் இருக்கலாம். அதனால் என்ன? அதை நாளைக்கு அல்லது உங்களின் அடுத்த தொகுப்பில் எழுதுங்கள். அவை, பால்ய காலத்தை மட்டும் அல்ல. எல்லாக் காலத்தையும் அகாலத்தையும் பருவத்தையும் பேசி நிலைபெறட்டும். வாழ்த்துகள்.
கவிஞர் கல்யாணி.சி
(கல்யாண்ஜி)