இலக்கிய இதழியல் முன்னோடிகள்


Author: ஜே. எம். சாலி

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 330.00

Description

தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட சைவருக்கோ, வைணவருக்கோ, கிறித்தவருக்கோ மற்றும் எந்த மதத்தவருக்கோ உள்ள தமிழ்ப் பற்றை விட எந்த வகையிலும் குறைந்ததன்று, முஸ்லிம் தமிழ் மக்களின் தமிழ்ப் பற்று. இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள் என எல்லை விரிந்த மரபுகளிலே வைத்துப் பார்க்கவும் மதிப்பீடு செய்யவும் தக்கது. தமிழில் உள்ள இலக்கிய வடிவங்களை, வகைமைகளை திறம்படக் கையாண்டதோடு, அரபு, பாரசீக மொழிகளில் அமைந்த இலக்கிய வடிவங்களையும் வகைமைகளையும் தமிழில் படைத்து ஆக்கம் சேர்த்த பெருமைக்குரியவர்கள் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகள். முஸ்லிம் ப்பைபாளிகள் சிறுகதை, புதினம், கவிதை, பாடல், காப்பியம், நாடகம், கட்டுரை, திறனாய்வு எனப் பல்வேறு தளங்களில் இயங்கி வரலாறு படைத்திருக்கின்றனர் என்பதோடு அதழியல், அரசியல், மார்க்கவியல், சமுதாயவியல் பார்வைகளில் செயல்பட்டிருக்கின்றனர் என்பதையும் இத்தொகுப்பு எண்பிக்கிறது. - ஈரோடு தமிழன்பன்

You may also like

Recently viewed