கலைஞர் ஸ்டாலின் உதயநிதி


Author: ஜெகாதா

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 400.00

Description

அரிதார மேடை முதல் அரசாங்கக் கோட்டை வரை, மூன்று தலைமுறைகள் கலைக்கிரீடம் தாங்கி அரச பீடம் அமரும் அதிசயம் எங்கேயும் யாரேனும் கண்டதுண்டா? பூவுலகமே திரும்பிப் பார்த்துப் பிரமித்து நிற்கும் தமிழ் உலகப் பெரும் பாக்கியம் இது. ‘விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா? ’இது கிராமத்துப் பொய்யா மொழி. ‘நேற்று கலைஞர் அமைச்சரவை, இன்று ஸ்டாலின் அமைச்சரவை, நாளை உதயநிதி அமைச்சரவையில் நான் இருப்பேன்’ என கழகப் பொதுச்செயலாளர் திருமிகு துரைமுருகன் அவர்கள் கூறியது ஒரு கலப்படமில்லாத திராவிட மரபணுவின் திறன் மிகுந்த தலைமுறை உத்தரவாதம் கண்டு நெக்குருகிய ஒரு புளகாங்கிதத்தில் நீந்திய ஒரு சுகானுபவச் சொல்லாகவே எல்லோரும் பார்க்கின்றனர். கலைஞரின் தலைமுறை விருட்சம் தமிழகத்தில் கலையும் அரசியலுமான வேரும் விழுதும் பரப்பி மங்காத மணம் கமழ இதனை மெய்ப்பிருத்திருக்கிறது. கலைத் துறையிலும் அரசியலிலும் அங்கீகாரம் பெற சகல சாமர்த்திய வித்தைகளும் நிறைந்த மக்கள் மைதானத்தில் இவர்கள் மூவரும் தனித்தனியே ஓடி தங்கள் திறமைகளை முன்னிலைப்படுத்திய மூன்று தலைமுறையினரின் ஒட்டுமொத்த ஒரு நூற்றாண்டு வரலாறான இந்நூலை உள்வாங்கி வாசிக்கும்போது உண்மையிலேயே பிரமிப்பூட்டும் என்று இந்நூலாசிரியர் இந்நூலைப் பற்றி கூறுகிறார்.

You may also like

Recently viewed