Description
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய உலகில் கவிஞர்கள் பெருகி வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆயினும் பெரும்பாலான கவிதைகள் காகிதப் பூக்களாக இருப்பது வருத்தத்தையும் தருகிறது. இந்தக் காகிதப் பூக்களின் நடுவில் கவிஞர் கமாலின் “எல்லாம் ஒன்றே” மனோரஞ்சித மலராகப் பூத்து மணம் வீசுகிறது. அதில் தத்துவ ஞானம் தேனாகத் திரண்டிருக்கிறது. கமாலின் ஆன்மீகத் தாகம் அவரை மற்றக் கவிஞர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது.
– கவிக்கோ அப்துல் ரகுமான்.