Description
“எனக்கு வயது எழுபதைத் தாண்டிவிட்டது. எனவே பெட்டியின் சாவியை அண்ணாவிடம் ஒப்படைக்கிறேன்” என்று ஈரோடு திராவிடர் கழக மாநாட்டில் பகிரங்கமாக அறிவித்தார் பெரியார். கொள்கை ரீதியான முரண்பாடு தி.மு.க. வைப் புறக்கணித்த்து. எதிர்க்கருத்து கொண்டிருந்தாலும் சமூக நீதிக்காக ஒன்று சேர்ந்து எதிரிகளை வெல்வது பெரியாரின் இயல்பு, அப்படி வென்றதே அண்ணா மற்றும் பெரியாரின் பிரியா நட்பு.
ஆட்சிக் கட்டிலைப் பிடித்த அண்ணா மறுகணமே ‘இந்த அரியணை பெரியாருக்குக் காணிக்கை‘ என்றார். தந்தையாகவும் தனயனாகவும் உறவு முறை கொண்டாடி, திராவிட அரசியலில் தலைவராகவும் தளபதியாகவும் செயல்பட்டது வரலாற்றுச் சிறப்பு. அண்ணா என்ற பெயர் ஒரு பண்பாட்டின் குறியீடு. பெரியார் அந்தப் பண்பாட்டின் வரலாற்று அடையாளம்.
உறங்கிக்கிடந்த தமிழ் மக்களை விழிக்கச் செய்தவர். அறியாமையில் மயங்கிக் கிடந்த தமிழ்ச் சமுதாயத்தினைத் தட்டி எழுப்பியவர்கள் தந்தை பெரியாரும் தளபதி அண்ணாவும்!