Description
காடுகளைக் களவாடிவிட்டு மழை வரவில்லை என புலம்பிக் கொண்டிருக்கிறோம். ஆற்றிலிருக்கிற நீரைத் தொழிற்சாலைகள் உள்ளே இழுத்துக் கொள்கின்றன. பதிலுக்குத் தன்னுடைய கழிவு நீரையெல்லாம் ஆற்றுடன் கலந்து விட்டு மக்கள் உயிரை பலிவாங்கிக் கொண்டிருக்கின்றன.
காற்றில் கலந்துள்ள நச்சுக்களைச் சுவாசிப்பதால் கர்ப்பப்பையில் இருக்கும் சிசுவும் ஊமையாகப் பிறக்கும் வாய்ப்பு உள்ளது என்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கருத்துத் தெரிவித்துள்ளது.
இந்த மண்ணில் உள்ள வளங்கள் அனைத்தும் அரசாங்கத்திற்குச் சொந்தமல்ல. மண்ணின் வளங்கள் அரசாங்கத்தின் சொத்து என அரசியல் சாசனத்தில் எங்குமே குறிப்பிடப்படவில்லை என உச்சநீதிமன்றம் தெளிவாக எச்சரிக்கை செய்து இருக்கிறது.
லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட தனியார் மயமும் கட்டற்ற பொருளாதாரப் போக்கும் இயற்கை வளங்களை எந்த வரம்புமின்றி சூறையாடிக் கொண்டிருக்கின்றன.