Description
இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களது தத்துவங்கள், கொள்கைகள், நடை முறைகளிலிருந்து மெல்ல விலகி பூர்சுவா கட்சிகளாக மாறி வருவதைக் கவனித்துவரும் வேளையில், சிங்கூர் பிரச்சனையில் மார்க்சிஸ்டுகள் பின்பற்றிய நடைமுறைகள் அக்கட்சி ஒரு பூர்சுவா கட்சியாகவே முழுமையுற்று நின்றதைக் காணமுடிந்தது. தொழில் வளர்ச்சி என்ற மான் தோல் போர்த்தி முதலாளித்துவப் புலியை உள்ளே கொண்டுவர முயன்றது; விவசாயிகளை வஞ்சித்தது; எதிர்ப்புகளை ஆயுதம் கொண்டு ஒடுக்கியது. அறிவுஜீவிகளும் கலைஞர்களும் கண்டிக்கும் வகையில் அதன் செயல்பாடுகள் இருந்தன. இந்த தலைகீழ் மாற்றத்தைக் கண்டு பலரும் அதிர்ந்தனர். கம்யூனிஸத்தின் மீதான நம்பிக்கை இன்னும் வடிந்தது.
இந்நிலையில் புதிய பொருளாதார மண்டலங்கள், நில ஆக்கிரமிப்பு, நிலத்தை இழந்து நிற்கும் விவசாயிகளின் நிலை, இழப்பீடாகப் பெற்ற பணம் அவர்களுடைய வாழ்க்கையைச் சீரழித்த விதம், ஒரு தொழிற்சாலையின் வருகை என்ற நிகழ்வு, அதனால் உருவாகும் எதிர்வினைகள், எதிர்நிலைகள்: இப்படி யோசித்துக்கொண்டிருந்த காலத்தில்தான், பலவகையான ரோபோ டாக்குகளைப் பற்றிய விவரங்கள் இணையதளத்தில் கிடைத்தன. வீட்டு வேலைகள் செய்பவையாக, செல்லப் பிராணியாக, போர்க்களத்தில் எதிரிகளின் நிலைகளை வேவு பார்ப்பவையாக... இந்த அதிர்ச்சித் தகவல்களே ரோபோ டாக் தொழிற்சாலை வருகையாக இந்நாவலில் பரிமாணம் கொண்டது./
-பின்னட்டைக்குறிப்பு