Description
"வாய்ப்பாட்டிலும், தந்தி மற்றும் காற்று வாத்தியங்களிலும் ஸ்வரங்களைத் தொடுவதற்கு தீவிர பயிற்சி தாண்டி மனோதர்மம் வேண்டும். அப்போதுதான் அந்த ஸ்வரங்கள் பிடிபடும். அவற்றைப் பார்க்க முடியாது. கோடிட்டுக் காட்டவும் இயலாது. படைப்பதிலும், பெறுவதிலும் அவற்றை உணரத்தான் முடியும். நல்ல கவிதையிலும் அப்படித்தான் தொட்டுக் காட்ட முடியா, உணர மட்டுமே முடிகிற ஸ்வரங்கள் உண்டு. கல்லில் வேண்டாதவற்றை நீக்கி சிற்பம் வடிக்கிற சிற்பியும், கவிஞனும் ஒரே ஜாதி. இந்தத் தொகுப்பில் சீனு ராமசாமி என்னும் கவிஞன் இசைக்கின்ற பல ஸ்வரங்களை உணர முடிகிறது."
- சுகா