காலப் பிசாசுகள்


Author: ம. ராஜேந்திரன்

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 750.00

Description

பிடித்த பிசாசுகள் போயின என்று கும்மியடிக்கும் போதே நம்மைப் பிடிக்கும் பிசாசுகளை என்ன செய்வது? பிசாசுகளிடமிருந்து விடுபடவும் பிசாசுகளிடம் பிடிபடலுமான போராட்டமாகவே வாழ்க்கை இருக்கிறதே! எழுத்தும் ஒரு பிசாசுதான். எழுதி எழுதித்தான் விடுபடவும் பிடிபடவும் வேண்டியிருக்கிறது. இப்படிப் பிசாசுகளிடமிருந்து விடுபடவும் பிடிபடவும் எனக்குக் கலை இலக்கியங்கள்தாம் கை கொடுக்கின்றன. எனக்குத் தெரிந்த வழி எழுத்து! எழுதிக்கொண்டிருக்கிறேன். எழுத்தைக்கொண்டே இதுவரை விடுபட்டு வந்திருக்கிறேன். – ம. இராசேந்திரன் காலப் பிசாசுகள் ம. இராசேந்திரன் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராகப் பொறுப்பு வகித்தவர். இவர் தமிழ்ப் பேராசிரியரும் எழுத்தாளரும் கணையாழி இதழின் வெளியீட்டாளரும் ஆவார். இவர்கோயம்பூத்தூரில் 2010 ஆம் ஆண்டில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க ஒருங்கிணைப்பாளராக வினையாற்றினார். 2022ஆம் ஆண்டு சனவரியில் அமைக்கப்பட்ட தமிழ்நாட்டு அரசின் பொதுநூலகச் சட்டம், விதீகள் திருத்த உயர்நிலைக் குழுவிற்குத் தலைவராக இருந்தார். கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டுள்ளன

You may also like

Recently viewed