Description
பெரிய சாதனையாளர்கள் எல்லாரும் முன்பு உங்களைப்போல் சாதாரணச் சிறுவர்களாக, சிறுமிகளாக இருந்தவர்கள்தான், நீங்கள் அனுபவித்த அதே உணர்வுகளை அவர்களும் அனுபவித்திருப்பார்கள், அதே குறும்புகளைச் செய்திருப்பார்கள், அதே திட்டுகளை வாங்கியிருப்பார்கள்... இதையெல்லாம் வாசிப்பது ஒரு தனிச்சுவை. இன்னொருபக்கம், இவற்றில் சில முக்கியமான பாடங்களும் இருக்கலாம், சாதனையாளர்களின் சிறுவயதுப் பண்புகள் அவர்களுடைய ஆளுமையில் எப்படிப் பிரதிபலித்தன என்று நாம் தெரிந்துகொள்ளலாம், முயன்றால் யாரும் பெரிய அளவில் வளரலாம், சாதிக்கலாம் என்பதும் புரியும். இந்தப் புத்தகத்தில் உள்ள பிரபலங்களின் சிறுவயது நிகழ்வுகளைச் சிறுவர்கள் விரும்பிப் படிப்பீர்கள், இவர்களைப்போல் மிகப் பெரிய வெற்றிகளைக் குவிப்பீர்கள்.