Description
மதுரை சரவணனின் அன்பிற்கினியாள் தொகுப்பிலுள்ள அத்தனை கதைகளிலும், மானுடம் ஆற்றொழுக்காய்பு பரவுகிறது. வித விதமான மனிதர்கள் தங்களுக்குள் ஊடாடும் போது வெளிப்படும் பொது மானுடத்தை நோக்கிய நகர்வுகள் இந்தத் தொகுப்பின் சிறப்புகள், பல்வேறு வாசிப்புகளுக்கும் இடம் தருகின்ற வகையில் அதிகாரம் பற்றிய சொல்லாடல்கள், சாதியத்தின நுணுக்கமான நகர்வுகள், வர்க்க வெளிப்பாடுகள் பெண்ணிய உள்ளியலின் சாடுகள் இந்தக் கதைகளில் நுண்ணிழைகளாக மின்னுகின்றன.