Description
சீமாட்டிகள், பிரபுக்கள், ஜெனரல்கள், குமாஸ்தாக்கள், மருத்துவர்கள், எடுபிடிகள், சிடுமூஞ்சிக் கணவன்கள், வாழ்வின் அத்தனை ஏக்கங்களும், அத்தனை துன்பங்களும் கொண்ட நடுத்தர வயதுப் பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள், பண்ணை வீடுகள், தேவாலயங்கள், பாசறைகள், அரசு அலுவலகங்கள் எல்லாம் செகாவின் பேனாவின் ஒன்றிரண்டு தீட்டல்களில்… நம் கண் முன்னே… குட்டிக் குட்டிக் கதைகளில் பிரம்மாண்டமான விவரிப்புகள்…