Description
பொதுவாக கவிஞர்கள் வாழ்வதில் தனித்தனி சிறப்புகள் உண்டு. ஆனால் பாரதியும், ஷெல்லியும் கவிதைகளிலேயே வாழ்க்கையை மூச்சாகக் கொண்டிருந்தனர் என்பது உலகமறிந்த விஷயம். வாழ்வில் சாதிப்பதென்பதோ மிகக் கடினமான விஷயம்தான். ஆனால், இருவரும் சிறிய வயதிலேயே செயற்கரிய சாதனைகளைப் படைத்தது என்பதோ மிகப் பெரிய விஷயம்! ‘பாரதியும் ஷெல்லியும்’ என்ற இந்த நூலைப் படிக்கின்றவர்கள் அனைவருக்கும், ‘வாழ்வு என்பது’ ஒரு லட்சிய
வேட்கையாக அமையும்.
“தான் கற்ற கல்வியை பிறருக்கு எடுத்துச் சொல்வதில்தான் கல்வியின் பெருமை அடங்கியிருக்கின்றது”
என்ற நோக்கத்தில் இருபெரும் கவிவாணர்கள் அவர்களின் எழுதுகோல்களால் பல படைப்புகளை அமைத்திருக்கிறார்கள்.