Description
அறிவுத்தேடல் என்பதே கற்றதை மக்களுக்குச் சொல்லுவதும், மக்களுக்குச் சொல்லும் போதே மறுபடியும் கற்றுக் கொள்வதும்தான். ஸ்டீபன் ஹாக்கிங்கிடம் "இன்னும் சில ஆண்டுகளில் நீங்கள் இறந்து போய் விடுவீர்கள் என்று தெரிவித்தபோது உங்களுக்குச் சோர்வு வரவில்லையா?" என்று கேட்டார்கள். "சில ஆண்டுகளில் இறந்து போய்விடுவேன் என்பதால், விரைந்து வேலை செய்யவேண்டும் என்கிற முடிவுக்கு நான் வந்தேன். வாழ்நாள் இருக்குமானால் மெதுவாகக் கூடப் பார்த்துக்கொள்ளலாம். அந்த முடிவே என்னை வாழ்வில் துரத்திற்று. கூடுதலான பணிகளைச் செய்வதற்கும் உதவிற்று" என்று சொன்னார்.