புதிய முப்பெரும் குற்றவியல் சட்டங்கள் | தமிழில் மட்டும்


Author: Editorial Board of ATC

Pages: 720

Year: 2023

Price:
Sale priceRs. 1,500.00

Description

முதலில் பாரதிய சாக் ஷ்ய அதிநியம், 2023 (Bharatiya Sakshiya Adhiniyam, 2023 repealing the old IEA) - இச்சட்டம் மொத்தம் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு சாட்சிய சட்ட வகைமுறைகளைத் தருகின்றன. அடுத்து, பாரதிய நியாய சன்ஹிதா, 2023 (Bharatiya Niyaya Sanhita repealing the old IPC). இச்சட்டத்தில் பல்வேறு குற்றங்களும், அவற்றுக்கான தண்டனைகளும் சட்டப்பிரிவுகளாக தரப்பட்டுள்ளன. மூன்றாவதாக பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா 2023 (Bharatiya Nagarik Suraksha Sanhita, 2023 repealing the old Cr.P.C.). இது மொத்தம் 39 இயல்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் கீழ் பல்வேறு சட்டப்பிரிவுகள் குடிமக்கள் பாதுகாப்பு பற்றிய நடைமுறைகளைத் தருகின்றன. குறிப்பாக, இச்சட்டத்தின் வகைமுறைகள் ஒவ்வொன்றின் கீழும் இதற்கு முந்தைய சட்டமான "குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு" நேரிணையான சட்டப்பிரிவின் எண் (Old Corresponding Section) கொடுக்கப்பட்டிருப்பது, இந்நூலை வாசிப்பவருக்கு நல்லதொரு புரிதலை தருகின்றது என்று சொன்னால் அது மிகையன்று. அதேபோல் பழைய மற்றும் இந்தப்புதிய சட்டப்பிரிவுகளின் ஒப்பீட்டு அட்டவணையும் இந்நூலில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளது. மேலும் குற்றங்களின் வகைப்பாடு என்ற தலைப்பின் கீழ் சட்டப்பிரிவு, குற்றம், அதற்கான தண்டனை, அக்குற்றம் கைது செய்தற்குரிய அல்லது கைது செய்தற்குரியதல்லாத குற்றமா, அதேபோன்று அது பிணையில் விடக்கூடிய அல்லது பிணையில் விடக்கூடாத குற்றமா?, அக்குற்றத்திற்கான விசாரணையை மேற்கொள்ளும் நீதிமன்றம் எது? என்ற விவரங்களின் அட்டவணையை புதிய சட்டத்தில் உள்ள அதே வடிவில் தமிழில் தந்திருப்பது சிறப்பாக உள்ளது. இச்சட்டத்தில் இடம்பெறும் 55 படிவங்கள் இந்நூல் இறுதியில் தரப்பட்டுள்ளன.

You may also like

Recently viewed