பண்டைய கால இந்திய வரலாறு எனும் இந்நூலில், சிந்து நாகரிகம் முதல் தென்னிந்திய பேரரசுகள் வரையான வரலாறு பாங்குடன் விவரிக்கப்பட்டுள்ளது. இந்நூலில் கி.மு.3000 லிருந்து கி.பி.971 வரையிலான கிட்டத்தட்ட 4000 ஆண்டு கால வரலாறு வரையப்பட்டுள்ளது. இந்நீண்ட நெடிய காலகட்டத்தில் தோன்றிய சிந்துவெளி நாகரிகம், வேதகால பண்பாடு, புத்த, சமண மத மறுப்பு இயக்கங்கள், மௌரியப் பேரரசு, சங்ககாலத் தமிழ்நாடு, அயலவர்களின் வருகை, குதப்பி பேரரசு, ஹர்ஷப் பேரரசு, தென்னிந்திய பேரரசு பற்றி இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. இந்நூல் இந்திய பொதுப்பணி தேர்வாணையம் மற்றும் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை கருத்தில் கொண்டு எழுதப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்நூல் TNPSC & UPSC போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், வரலாற்று மாணவர்கள், வரலாற்று ஆசிரியர்கள், வரலாற்றாளர்கள், ஆய்வு மாணவர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவருக்கும் பயன்படும். குடிமைப்பணி எனும் இந்திய ஆட்சிப்பணி தேர்வுக்கு பயன் தரும் நூல்களை எழுதி வரும் பேராசிரியர் முனைவர் திரு கா.வெங்கடேசன் அவர்களின் கருத்து வண்ணத்தில் வெளி வந்துள்ள மற்றுமொரு அற்புத படைப்புதான் இந்த "பண்டைய கால இந்திய வரலாறு " எனும் நூல்". நழுவவிடாதீர். (இப்புத்தகம் பற்றிய மேற்கண்ட விவரங்களை Shri Pathi Rajan Publishers முழுமையாக பதிப்பித்து இங்கு வெளியிட்டுள்ளது. எனவே அவ்விவரங்கள் அதன் அறிவுசார் சொத்துரிமையாகும். இந்நூலை Shri Pathi Rajan Publishers-க்கு ஆணை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்)