Description
திருக்குறளுக்கு எழுதப்பட்ட உரைகளில் மிகச்சிறந்த பகுத்தறிவு உரை நாவலர் நெடுஞ்செழியன் எழுதிய உரை. இந்த நூலுக்கான முன்னுரையே ஒரு சிறு நூலாக வெளிவந்துள்ளது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த முன்னுரை அது.
திருக்குறள் புத்தகம் இல்லாத வீடு தமிழகத்தில் இருக்க வாய்ப்பே இல்லை.
ஆனால் நாவலர் உரை எத்தனை பேரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை. இயக்குநர் திரு. கரு. பழனியப்பன் அவர்கள் பல மேடைகளில் நாவலர் உரையை விதந்தோதி பேசியுள்ளார். அதன் பிறகு இந்த உரைக்குப் பரவலான கவனம் கிடைத்தது.
கடவுள் வாழ்த்துக்குப் பதிலாக அறிவன் சிறப்பு என்று தொடங்கும் முதல் அதிகாரமும் அந்தக் குறள்களுக்கான விளக்கமுமே பட்டாசு ரகம். திருமண நிகழ்வுகளில் பரிசளிக்க மிகச்சிறந்த நூல். நூல் சேகரிப்பாளர்களிடம் இருக்க வேண்டிய நூல்.
நாவலர் உரையின் தெளிவுரையை மட்டும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிட்ட நன்செய் பதிப்பகம் முன்னுரை உட்பட முழு உரையையும் தரமான கெட்டி அட்டைத் தயாரிப்பில் வெளியிட்டுள்ளது. 744 பக்கங்கள் கொண்ட நூல் 400 ரூபாய் மட்டுமே.