Description
நாம் பார்க்கும், படிக்கும் நல்ல விஷயங்கள் எல்லாவற்றிலும் பொது அறிவு பொதிந்திருக்கிறது. பொது அறிவை வளர்த்துக்கொண்டால் அது எல்லோருக்கும் எப்போதும் உதவும். மாணவர்கள், போட்டித் தேர்வு எழுதுவோர் மட்டுமே அறிந்து கொள்ள வேண்டியதல்ல பொது அறிவு. அனைவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். இலக்கியவாதிகள், ஆய்வாளர்கள், நண்பர்கள், மாணவர்கள், திரைத்துறையினர், அரசு அதிகாரிகள் ஆகியோருடன் டாக்டர் சங்கர சரவணன் பரஸ்பரம் பரிமாறிக்கொண்ட தகவல்கள், போட்டித் தேர்வுப் பயிற்சி அனுபவங்கள், முகநூலிலும் பொது அறிவுப் புத்தகங்களிலும் எழுதியவை... என அனைத்துத் தரப்பு வாசகர்களும் பயன்பெறும் கட்டுரைகளாகத் தொகுத்துத் தந்துள்ள நூல் இது. ‘சொல்லுக சொல்லிற் பயனுடைய’ என எல்லாக் கட்டுரைகளிலும் பயனுள்ள தகவல்களைத் தந்திருக்கிறார் நூலாசிரியர். குறிப்பாக இன்றைய இளம் தலைமுறையினர் வாசிப்பு முறையின் வசதிக்கேற்ப குறுகத் தரித்த கட்டுரைகளாகக் கொடுத்திருப்பது இந்த நூலின் தனிச்சிறப்பு. வாசிப்பின் முக்கியத்துவம், போட்டித் தேர்வர்களுக் கான ஆலோசனை, அறிவை விரிவாக்கம் செய்ய வேண்டியதன் அவசியம், படித்துப் பயன்பெற வேண்டிய நூல்கள்... இப்படி பொது அறிவை விரிவுபடுத்தத் தேவையான பல தகவல்களைக் கொண்டிருக்கும் பல்சுவைக் கதம்பம் இந்த நூல்.