ஸ்ரீமத் பாகவத புராணம்


Author: ராஜி ரகுநாதன்

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 340.00

Description

படித்தாலும் கேட்டாலும் புண்ணியம் அளிக்கும் காவியங்களில் ஒன்று ஸ்ரீமத் பாகவத புராணம். மஹாவிஷ்ணுவின் அவதார நோக்கங்களையும், லீலா வினோதங்களையும், தம் பக்தர்களைக் காப்பதற்காகப் பகவான் செய்த அற்புதங்களையும் விவரிப்பதே ஸ்ரீமத் பாகவதம். மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் பத்து. ஆனால் பாகவதத்தில் இருபத்திரண்டு அவதாரங்கள் பற்றிக் கூறப்படுகிறது. இது போன்ற நுணுக்கமான விவரங்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. ஸ்ரீமத் பாகவதத்தின் சம்ஸ்கிருத மூலத்திலிருந்து நேரடியாகத் தமிழில் எழுதப்பட்டிருப்பது இப்புத்தகத்தின் சிறப்பு. கஜேந்திர மோட்சம், ப்ரஹ்லாத சரித்திரம், குசேலரின் கதை எனப் பகவானின் பக்தர்களின் கதையையும் இதில் நாம் அறியலாம். பகவானைப் பற்றிய ஞானமே பாகவதம். பகவானோடு நமக்கு இணைபிரியாத இணைப்பை ஏற்படுத்தி மோட்சத்திற்கான பாதையைக் காட்டுகிறது ஸ்ரீமத் பாகவதம். தெளிந்த மனதுடன் ஸ்ரீமத் பாகவதத்தைப் படிப்பதன் மூலம் தீராத நோய்கள் தீரும். நம் பாவங்கள் விலகும். நாம் நினைத்த காரியம் கைகூடும். வயது வித்தியாசமின்றி அனைத்து வயதினரும் படிக்கும் வகையில், வசீகரிக்கும் மொழியில், எளிமையான நடையில் ராஜி ரகுநாதன் இப்புத்தகத்தை எழுதியுள்ளார்.

You may also like

Recently viewed