Description
வளையாபதி தமிழின் ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று. சமண தத்துவத்தைப் போதிக்கும் நோக்கில் எழுதப்பட்டுள்ள இந்நூல்முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை. பல்வேறு உரையாசிரியர்கள் தங்களது நூல்களில் மேற்கோளாகப் பயன்படுத்திய வளையாபதியின் செய்யுள்களைத் தொகுத்ததன் வாயிலாகவே இந்நூல் தற்போதைய வடிவத்தை எட்டியுள்ளது. கிடைக்கப்பெற்ற மொத்த செய்யுள்களின் எண்ணிக்கை வளையாபதியை இயற்றிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
மேற்குறித்த 72 செய்யுள்களையும் சீர்பிரித்துஎளிய நடையில் அதற்கான விளக்கத்தை எளியஇனிய தமிழில் கொடுத்துப் பிரமிக்க வைக்கிறார் ஆசிரியர் சத்தியப்பிரியன்.
வளையாபதி நூலைத் தமிழர்கள் முழுமையாக உள்வாங்கிடஅதன் உயிர்நாடியான சமணம் குறித்து அறிந்திருக்கவேண்டியது அவசியம். இதற்காகவே சமண தத்துவ தரிசனம்என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றையும் இப்புத்தகத்தில் ஆசிரியர் எழுதி இருப்பது இந்தப் புத்தகத்தின் கூடுதல் சிறப்பு.