Description
மகாபாரதத்தில் பல கிளைக் கதைகள் இருந்தாலும் நள தமயந்தி கதைக்கு ஒரு தனித்துவம் உண்டு. இது இயல்பான வாழ்க்கையைப் பேசும் கதை.
ஒரு காதல் தம்பதியிடையே நடக்கும் பாசப் போராட்டம், அவர்களுக்கு வரும் சோதனைகள், அதனால் ஏற்படும் பிரிவு, துன்பங்கள், அதிலிருந்து மீண்டெழுவதற்கான முயற்சிகள் என ஓர் உன்னத வாழ்க்கையை இந்தக் கதை காட்சிப்படுத்துகிறது.
நள தமயந்தி கதையின் முக்கிய அம்சம், இதை நாம் இன்றைய வாழ்க்கையோடும் பொருத்திப் பார்க்கலாம். நம் வாழ்க்கைக்குத் தேவையான பல முக்கிய நெறிகளை இந்தக் கதை எடுத்துரைக்கிறது.
கணவன், மனைவிக்கு இடையேயான அன்பு, சோதனைகள் வரும்போது நாம் எடுக்கவேண்டிய முடிவுகள் எனப் பல பாடங்களை இந்தக் கதை உங்களுக்கு உணர்த்தும்.
எளிமையான வடிவில், சரளமான மொழியில் நள தமயந்தியின் கதையை ஜெயந்தி நாகராஜன் எழுதி இருக்கிறார்.