Description
வாழ்க்கை என்பது நமக்கு அளிக்கப்பட்ட ஒரு வரம்.
எப்படி ஓர் உன்னதமான வாழ்க்கையை வாழவேண்டும் என்பதற்கான வழிகளை இந்தப் புத்தகத்தில் நீங்கள் காணலாம்.
வாழ்க்கை என்பது என்ன?
குடும்ப வாழ்க்கைக்கும் தொழில் வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன?
சிலர் மட்டும் வாழ்க்கையில் வெற்றிகளைக் குவித்துக்கொண்டே இருப்பது எப்படி?
சிறந்த மனிதனாக வாழ்ந்து நமது கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவது எப்படி?
ஒரு நல்ல மகனாக, மகளாக, கணவனாக, தந்தையாக, மனைவியாக, குடிமகனாகச் செயல்படுவது எப்படி?
இதுபோன்ற பல கேள்விகளுக்குப் பல அறிஞர்களின் வாழ்வில் இருந்தும், தம் சொந்த அனுபவத்தில் இருந்தும், பல எடுத்துக்காட்டுகளுடன், எளிமையான மொழியில் இந்தப் புத்தகத்தின் மூலம் பதிலளிக்கிறார் ஆசிரியர் ஜி.எஸ்.சிவகுமார்.
எப்படி ஒரு மேன்மையான வாழ்க்கையை வாழ்வது என்பதற்கு இந்தப் புத்தகம் உங்களுக்கு வழிகாட்டும்.