Description
ஒரு நல்ல காதல் பெரும் காத்திருப்புக்கும் பல தவறான காதலர்கள் கொடுத்த அனுபவங்களுக்கும் பின்னர் மாறுவேடத்தில் வரும் அதிஷ்டத்தைப் போல வந்து சேர்க்கிறது. ஒரு நல்ல காதலென்பது பேறு! கடுந்தவத்தின் பின்னரான வரம்!
‘மன்மதம் நீ’ காதலின் வலிகளைச் சுகமாக்கிய காதலைக் கொண்டாடும் இதயங்களுக்கானது. உங்கள் உண்மையான காதல் நிராகரிக்கப்பட்டுவிட்டதா? நீங்கள் தூக்கி எறியப்பட்டு உடைந்து போய்க் கிடக்கிறீர்களா? இது உங்களுக்கான நேரம். உங்கள் இதயத்துக்குப் பொருந்தும் மிகச் சிறந்த இதயத்தைக் கண்டடையும் வரை மீண்டும் மீண்டும் காதலியுங்கள்!
- நவயுகா குகராஜா