Description
கல்லெறிந்தால் நெல் விளைக்கும்
முல்லைப் பெரியாறு முன் மொழிந்த
முத்தமிழ் மகசூல்
பேராசிரியர் கவியருவி அப்துல் காதர்!
விழுவாய் எல்லாம் தமிழரை
எழுவாய் ஆக்கும்
எழுதுகோல் ஏவுகணை!
சுடர்ப் பொறிகளையும் சூரியனாக்கும்
எல்லோரையும் தலை நிமிர வைக்கும்
இலக்கிய வானம்
கவிக்கோ அவர்களைக்
கை பிடித்துக் கவிதைத்
தடம் பதித்தவர்
கவிமாமணியாய் உதித்தவர்!
சின்னச் சின்னப் பிறைகளில்
தன்னைப் பிழிந்து
எண்ணைய் வார்த்து
மின்னல் திரிகளால்
விளக்கேற்றி
இல்லை இல்லை
கிழக்கேற்றிய கிரணவாசல்!
ஆலங்கட்டிகளை அகத்துள் பெய்வார்
ஈழம் வெல்ல என்றும்
அம்பு எய்வார்
மழை வில் எடுத்து
மணித்தமிழ்க் கவிதைக்கு
மாராப்பு நெய்வார்
முத்தச் சுவையினை
மொழியால் செய்வார்!
அவைகளை எல்லாம்
அவ்வைகளாக்கி
ஆயுள் கூட்டிட
கருநெல்லிக் கருத்துக்
கனிகளைக் கொய்வார்!
மேல் கீழ் சமனாக்க
மேதமை மலர்த்துவார்
பூக்களாலும் பூகம்பம் நிகழ்த்துவார்!
Universal Publishers