Description
’ஆயிரத்து ஓர் இரவுகள்’ என்னும் இந்தக் கதைத் தொகுதி, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அரேபியா, எகிப்து, பாரசீகம் முதலிய இஸ்லாமிய நாடுகளில் பிரசித்தி அடைந்திருந்தது. மேல்நாட்டு ஆசிரியர்கள் சிலர், இதனுடைய சிறப்பை உணர்ந்தார்கள். ஆகையினால், அவர்கள் அரேபிய நாடுகளுக்குச் சென்று, அம்மொழிகளைப் பயின்று. அக்கதையைத் தங்கள் மொழியில் உருவாக்கினார்கள். அவர்களுடைய பெருமுயற்சி மிகவும் போற்றுதற்கு உரியது, மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் பழம் பெருங் காவியங்கள், என்றாலும் அவற்றின் பழங்கால நடையின் காரணமாக, இக்கால வாசகர்கள் விரும்பிப் படிப்பதில்லை. ஆகவே, ராஜாஜி அவர்கள் இக்கால வாசகர்கள் விரும்பும் வண்ணாம், அந்தக் காவியங்களுக்குப் புது மெருகு கொடுத்தார்கள். அதனால், லட்சக்கணக்கானவர்கள் அவற்றைப் படித்துப் பயனடைந்தார்கள்.
அதைப் பின்பற்றியே இந்தக் கதைத் தொகுதியைத் தொகுக்க முற்பட்டேன். மூலக்கதைகளில் உள்ள சம்பவங்கள் எதையும் விட்டு விடாமல், அவசியமற்ற வர்ணனைகளை மட்டுமே நீக்கியுள்ளேன். எனவே, இந்நூல் வாசகர்களுக்குச் சலிப்புத் தோன்றாமலும், விரும்பிப் படிக்கும் விதத்திலும் இருக்கும் என்பது என் நம்பிக்கை,
* முல்லை பிஎல். முத்தையா