Description
உலகம் வியக்கும் வண்ணம் ஓயாது உழைத்தார். தன் இறுதி மூச்சுள்ளவரை அயராது பாடுபட்டார். உண்மையாகத் தொண்டாற்றினார். உறுதியுடன் செயல்பட்டார். அவர் செல்வந்தராயிருப்பினும் செல்வம் சேர்க்க விழையவில்லை. அவரை நாடிப் பல பொறுப்புக்கள் வந்தபோதும் அவற்றினை உதறித் தள்ளினார். அத்தகைய பெருந்தகையை, பேரறிவாளனை இந்நாள் வரை யாரும் கண்டதில்லை, இனிமேலும் காண்பதரிது. அப்பேரறிவாளன் முகிழ்ந்த ஈரோட்டில் பிறந்த நான், அவருடைய பேரறிவினை எடுத்துக்காட்டுகளோடு எடுத்தியம்புவது என் வாணாளின் கடமையெனக் கருதியே இந்நூலினை உங்கள் முன் வைக்கிறேன்.