Description
வாழ்வின் இலக்கை அடைவதற்கு முதல் படி நம்மைப் பற்றி நாம் நன்றாக அறிந்தும் புரிந்தும்கொள்வதுதான். வாழ்வில் வெற்றி அடைபவா்களுக்கும் தோல்வி அடைபவா்களுக்கும் இதுதான் மிகப் பெரிய வித்தியாசம். மிகக் குறைந்த சதவிகிதத்தினரே தங்கள் வாழ்வை ரசித்து வாழ்கின்றனா். மகிழ்ச்சியும் ஊக்கமும் உள்ள மனதே பல விஷயங்களை ஆக்கப்பூா்வமாக சாதிக்கவும் செய்கிறது. அவ்வித மனமே பல உடல் மனநோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கவும் செய்கின்றது. இந்நூல் உங்கள் மனதின் எதிர்மறை எண்ணங்களிலிருந்து நீங்கள் விடுபட உதவி செய்கிறது