Description
இந்திய அணுசக்தித் திட்டத்தின் தந்தை எனப் புகழப்படும் ஹோமி ஜஹாங்கீர் பாபா இந்திய அணு ஆராய்ச்சித் திட்டத்தின் முன்னோடியாக விளங்கியவர். அவருடைய லட்சியம், தொலைநோக்குப் பார்வை, தொழில்முனைவு ஆகியவை இந்தியாவில் நவீன அறிவியலின் வளர்ச்சியை வடிவமைத்தன. அறிவியல் துறையில் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த இவர் அதற்கான அமைப்புகளை நிறுவி இந்தியாவில் அணு ஆராய்ச்சிக்கான கட்டமைப்பை வகுத்தார்.
இந்த வாழ்க்கை வரலாற்று நூல் ஹோமி ஜஹாங்கிர் பாபாவின் வாழ்க்கையையும் காலத்தையும் பற்றிப் பேசுகிறது. தனது லட்சியத்தை அடைய அவர் மேற்கொண்ட போராட்டங்கள், சாதனைகள் ஆகியவற்றைச் சித்தரிக்கிறது. கலை, கட்டிடக் கலை, ஓவியம், இசை ஆகியவற்றில் அவருக்கு இருந்த ஆர்வத்தையும் காட்டுகிறது.
இந்தியா குறித்த பாபாவின் பார்வையை முன்வைக்கும் இந்த நூல் இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சியை ஒழுங்கமைப்பதில் அவர் ஆற்றிய பங்கைத் தெளிவாக விளக்குகிறது.