Description
மர்மக் கதைகளின் மகாராணியிடமிருந்து குளிர்காலக் கொலைக் குவியல்! பயங்கரமான பனிப்பொழிவுகள், ஆபத்தான பரிசுப் பொருட்கள், விஷம் கலக்கப்பட்ட உணவுப் பதார்த்தங்கள், மற்றும் மர்மமான விருந்தாளிகள் . . . அகதா கிறிஸ்டியின் பிரபலமான துப்பறிவாளர்கள் பலர் இடம் பெறுகின்ற இப்புதிய சிறுகதைத் தொகுப்பு, குறைவான சூரிய வெளிச்சத்தையும் முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கின்ற ஊதல் காற்றையும் உள்ளடக்கிய கடுங்குளிர்காலத்தில், கணப்படுப்பின் இதமான சூட்டில் குளிர்காய்ந்து கொண்டே படிப்பதற்குக் கச்சிதமான ஒன்று.